தனது வார்டில் வசிக்கும் பொது மக்களிடம் குடிநீர் இணைப்பிற்கு 2000 ரூபாய் கொடுத்தால் தான் போடுவோம் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போட மாட்டோம் என்று நகராட்சி ஊழியர் கூறி 2000 ரூபாய் வாங்கிக் கொண்டு இரண்டு அடி பழுப்பை போட்டு 2000 ரூபாய் வாங்கிக் கொண்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். வீட்டு வரி மட்டும் கட்டுகின்றோம் ஆனால் அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை என்றும் இங்க போடப்பட்ட சிமெண்ட் சாலைகள் முடிவடையாமலே பாதியிலேயே கிடப்பில் போட்டு விடுவதாக பொதுமக்கள் மற்றும் வார்டு கவுன்சிலர் கூறுகிறார்.
திமுக கவுன்சிலர் ஆன தனபால் கூறும்போது நகராட்சி அலுவலகத்தின் மூலம் தினசரி மார்க்கெட் வசூல் தள்ளுவண்டிக்கு ரூபாய் 20 ம் லோடு ஏற்றி வந்து கடைக்கு கடை இரக்கும் டாடா ஏசி லாரி போன்ற வாகனங்களுக்கு 30,50 ரூபாய் என்று வசூல் செய்யப்படும் ரசீதில் தேதி கையொப்பம் இல்லை என்றும் இதன் மூலம் வசூல் செய்யப்படும் பணம் முறையாக கணக்கு காட்டப்படவில்லை என்று கூறி பொதுமக்களும் கவுன்சிலரும் சேர்ந்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு எங்கள் வார்டுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment