தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குறிஞ்சிப்பாடி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 8 November 2024

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குறிஞ்சிப்பாடி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குறிஞ்சிப்பாடி ஒன்றிய குழு கூட்டம் குறிஞ்சிப்பாடியில் ஒன்றிய தலைவர் தோழர் மெய்யழகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கடலூர் மாவட்ட செயலாளர் ஆர்.கே.சரவணன், ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடேசன், ஒன்றிய நிர்வாகிகள் கே.சேகர், கே.சுப்பிரமணியன், பி.கிருஷ்ணமூர்த்தி, எம்.டி.சண்முகம், பி.ராஜாராமன், ஜி.வெங்கடேசன், உள்ளிட்ட நிர்வாகிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


குறிஞ்சிப்பாடி பகுதி விவசாயிகளின் பாசன ஆதாரமாக உள்ள செங்கால் ஓடை மற்றும் ஏரிகள், குளம், கிளை வாய்க்கால்களை தூர்வாரி, கரைகளை சீரமைத்து பாசன ஆதாரத்தை உறுதிப்படுத்திட வேண்டும், குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண்மை துறை அலுவலகம் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உழவடைக் கருவிகள், இடுபொருட்கள், மற்றும் விதைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அரசியல் அதிகார தலையீடு இல்லாமல் பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.


குறிஞ்சிப்பாடி தாலுகாவில் கிழக்குப் பகுதி விவசாயிகளின் பாசன ஆதாரமான பெருமாள் ஏரி சமீபத்தில் தூர்வாரப்பட்டது  முழுமை அடையாமல் தற்போது நீர் வரத்து உள்ளது. வரத்து வாய்க்கால் கான்கிரீட் கட்டுமானம் மூலம் இணைக்கப்பட வேண்டும். முடிக்கப்படாத தூர் வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கரைகள் ஆங்காங்கு மழையால் உடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சீர் செய்ய வேண்டும்.


பெருமாள் ஏரி பகுதியை விடுமுறை கால சுற்றுலா தலமாக மாற்றி அமைக்க வேண்டும், படகுக்குழாம், சிறுவர் விளையாட்டு பூங்கா, சிறுவர்கள் விளையாட்டு திடல், உள்ளிட்டவைகளை ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், கடலூர் மாவட்டத்தில் தற்போது நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகிறது, குறிஞ்சிப்பாடி வழியாக NH 532 சாலை விரிவாக்கப் பணிகள் நடக்கிறது.. சாலை ஓரங்களில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள், விவசாய பாசன வாய்க்கால்கள் வெட்டி கலைக்கப்பட்டு விட்டது. சாலையோர மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டுவிட்டது. புதிய பயன்தரும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்திடவும், எதிர்வரும் பருவமழைக்குள் அனைத்து வாய்க்கால்களையும் சரி செய்து தூர்வாரி சீரமைத்திட  நெடுஞ்சாலை மற்றும் பொதுப் பணித்துறைகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். 


குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கப்பட்டது. மனு கொடுத்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் இலவச வீட்டு மனை மற்றும் பட்டா வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும், தமிழக அரசின் சார்பில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் விண்ணப்பித்த தகுதி உள்ள அனைவருக்கும் பாரபட்சமின்றி வீடு ஒதுக்கீடு செய்து வேலை உத்திரவு வழங்க வேண்டும். 


குறிஞ்சிப்பாடி வட்டார அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் கூடுதல் மருத்துவர்களை நியமித்து பருவமழைக்கால நோய்கள் தடுப்பு மற்றும் சிகிச்சைகளை தீவிரப்படுத்திட வேண்டும், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் நவம்பர் 25 ந்தேதி குறிஞ்சிப்பாடியில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 

No comments:

Post a Comment

*/