அதிலும் பட்டாசு கடைகள், இனிப்பு கடைகள், ஜவுளி கடைகள் என கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பியது. விற்பனையாளர்கள் பொருட்களை விற்பதற்கு தடுமாறித்தான் போனார்கள். மேலும் கடந்த காலங்களில் தீபாவளிப் பண்டிகை என்றால் பண்டிகைக்கான பொருட்கள் விற்பனையானது ஒரு மாதத்திற்கு முன்பே துவங்கி மாதம் முழுவதும் தினமும் கூட்டம் குறையாமல் வியாபாரம் நடைபெற்று வரும் நிலையில், தற்போது தீபாவளிக்கு முதல் நாளாக இருப்பதால் சுமார் ஆறு மணி நேரம் வியாபாரம் மட்டுமே இருக்கிறது என அனைத்து வணிகர்களுமே தெரிவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக கூறப்படுவது இனிப்புகள், பட்டாசுகள், ஜவுளிகள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துமே தற்போது ஆன்லைன் வர்த்தகம்மூலம் விற்பனை செய்யப்படுவதால் பாரம்பரியமாக நடைபெற்று வரும் வணிக நிறுவனங்களில் மக்கள் பொருட்கள் வாங்கும் நுகர்வு அளவு 30 சதவீதம் அளவிற்கு குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். அதனால் ஒரு நாள் வியாபாரம் மட்டுமே தங்களுக்கு இருப்பதாகவும், ஆனால் இதற்காக பல நாட்கள் சிரமப்பட்டு அதிக அளவில் பணியாளர்களை நியமித்து, அதிக அளவில் சீரியல் செட் அலங்காரம் செய்து விற்பனையை எதிர்பார்த்து காத்திருந்தோம்.
எதிர்பார்த்தது போல வியாபாரம் இல்லை என வணிகர்கள் தெரிவிக்கின்றனர். ஆன்லைன் வர்த்தகம் தவிர்க்க முடியாதது தான் என்றாலும் உள்ளூர் வணிகர்களுடைய வியாபாரம்உயர்ந்தால் தான் உள்ளூர் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று இப்பகுதி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment