இந்த நிலையில் வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவர் நேற்று உயிரிழந்தார். உறவினர்கள் ஒன்று கூடி அவரை நல்லடக்கம் செய்வதற்காக சுடுகாட்டிற்கு உடலை எடுத்துச் சென்றனர். அப்போது அங்குள்ள வாய்க்காலின் மேல் அமைநத்திருந்த ஒற்றையடிப் பாலம் உடைந்து போனதால் வேறு வழி இல்லாமல் அங்குள்ள வடக்கு ராஜன் வாய்க்காலில் அதிக ஆழமுள்ளதண்ணீரில் உடலை சுமந்து சென்றனர். அப்போது நீர்மட்டம் அதிக அளவில் இருந்த நிலையில் உடலை தூக்கிச் செல்ல முடியாத நிலையில் தூக்கிச் சென்ற உடலானது தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. இருந்தாலும் உடலை சுமந்து சென்றவர்கள் பத்திரமாகப் போராடி கரை சேர்க்க முயற்சி செய்தனர்.
ஆனாலும் தண்ணீரின் வேகம் அதிகமாக இருக்கவே வாய்க்காலில் சுமந்து சென்ற உடல் தண்ணீர் செல்லும் திசைக்கு இழுத்துச் செல்ல முற்பட்டபோது கிராம மக்கள் பாடையுடன் சேர்த்து அதைக் கெட்டியாகப் பிடித்துத் தூக்கிச் சென்றவாறு மறுகரைக்குச் சென்றனர். இது குறித்து கிராம மக்கள் தெரிவிக்கும் போது பல மாதங்களாக இந்த பிரச்சனை இருந்து வருவதாகக் கூறுகின்றனர். இறந்தவர்களின் உடலை மறுகரையில்உள்ள கொள்ளிடம் ஆற்றுப்பகுதியின் ஓரமாக உள்ள சுடுகாட்டில் நல்லடக்கம் செய்வதற்கு அதிகாரிகள் உடனடியாக ராஜன் வாய்க்காலில் பாலம் அமைத்துத் தர வேண்டும் என்பதே இக்கிராமத்தினரின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment