தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் தகவல்
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 25ற்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.
எனவே, வரும் 10.06.2022 வெள்ளிக்கிழமை அன்று கடலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெற தகுதியின்அடிப்படையில், பத்தாம் வகுப்பு (SSLC), பன்னிரண்டாம் வகுப்பு (HSC), ஐடிஐ (ITI), டிப்ளமோ (Diploma) பட்டப்படிப்பு (Degree), ஏ.என்.எம்(ANM), ஜி.என்.எம்(GNM), டிப்ளமா நர்சிங்(DIPLOMA NURSING), பி.இ(B.E) படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும், இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment