இம்முகாமில் வருவாய்த்துறை சார்பில் 169 பயனாளிகளுக்கு ரூ.11,73,100/- மதிப்பீட்டிலும், வேளாண்மைத்துறை சார்பில் 22 பயனாளிகளுக்கு ரூ.21,250/- மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.79,400/- மதிப்பீட்டிலும், ஊராக வளர்ச்சித் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.25,35,000/- மதிப்பீட்டிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 18 பயனாளிகளுக்கு ரூ.1,02,808/- மதிப்பீட்டிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.46,830/- மதிப்பீட்டிலும், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.40,000/- மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.15,000/- மதிப்பீட்டிலும் என ஆக மொத்தம் 233 பயனாளிகளுக்கு ரூ.39,58,388/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கடந்த (26.06.2024) சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு போதைப் பொருள் பயன்படுத்துதல் மற்றும் கடத்துதலுக்கெதிராக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தலைமையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்ததாவது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எல்லாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் அனைத்துதரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலும், பொதுமக்களின் தேவையை பூர்த்திசெய்யும் வகையில் அவர்கள் பகுதியிலேயே நேரடியாக மனுக்கள் பெற்று தகுந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவருகிறது.
புதுமைப் பெண் திட்டத்தின் வாயிலாக 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கு மாதம் ரூ.1000/- வழங்கப்பட்டுவருகிறது. மேலும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் வழங்கப்படவுள்ளது. அதேபோன்று, தமிழ்புதல்வன் என்ற திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கும் உயர்கல்விக்கான உதவித்தொகைகள் வழங்கப்படவுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டுவருகிறது. மேலும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
அரசின் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்களை தாங்கள் நன்கு அறிந்துகொண்டு பொதுமக்களாகிய நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், இளைஞர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கும் வகையில் தாட்கோ, மாவட்ட தொழிற்மையம் போன்றவைகள் மூலம் பல்வேறு கடன் சார்ந்த திட்டங்களை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பள்ளி இடைநிற்றல் இல்லாத கிராமமாக திகழ வேண்டும். மேலும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதை பழக்கவழக்கங்களுக்கு ஆட்படாமல் உள்ளதை பெற்றோர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உறுதிசெய்ய வேண்டும். அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் அமைத்து பொதுவெளியில் மலம் கழித்தல் அற்ற நிலையை உருவாக்க ஊராட்சிமன்றத் தலைவர் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இம்முகாமில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை போன்ற பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து அரங்குகள் பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது என தெரிவித்தார்.
No comments:
Post a Comment