நல்லூர் ஸ்ரீவில்வவனேஸ்வரர் கோயில் மாசி மக திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நல்லூர் மணிமுத்தாறு மற்றும் கோமுகி ஆறுக்கும் நடுவில் மிகவும் பிரசித்தி ஸ்ரீவில்வவனேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது
இத்திருக்கோவிலில் வருடந்தோறும் மாசிமகத் திருவிழா நடைபெறும் அதன்படி இந்த ஆண்டிற்கான மாசி மாத திருவிழா பிப்ரவரி 25- ந் தேதி நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
இதில் முக்கிய திருவிழாவாக மார்ச் 2- ந் தேதி ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும் மார்ச் 5- ந் தேதி திருத்தேர் வீதியுலாவும், மார்ச் 6- ந் தேதி மாசிமகத்தன்று மரிக்கொழுந்து பந்தலில் ஸ்ரீ பிரஹந்தநாயகி,ஸ்ரீ பாலம்பிகை சமேத ஸ்ரீ வில்வவனேஸ்வரர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளும் திருவீதியுலாவும் நடைபெறும்
இத்திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று நடைபெற்றது அப்போது நல்லூர் மற்றும் சுற்று வட்டார முக்கியஸ்தர்கள், பக்தர்கள் முன்னிலையில் திருக்கோவிலின் பரம்பரை அர்ச்சகர் சாம்பசிவம் குருக்கள், சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றினார்.
No comments:
Post a Comment