ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கு (ஜனவரி 6) உள்ளூர் விடுமுறை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 January 2023

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கு (ஜனவரி 6) உள்ளூர் விடுமுறை.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும். மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம். ஆருத்ரா என்பது திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும் ஆருத்ரா தரிசனமாகும். 


சேந்தனார் வீட்டுக்கு சிவன் பெருமான் களி உண்ண சென்ற தினம் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் ஆகும். அதனால் இந்த நாளையே ஆருத்ரா தரிசன விழாவாக கொண்டாடப்படுவதாக புராணங்களில் கூறப்படுகிறது.


எனவே இந்த நாளன்று ஒவ்வொருவர் வீட்டிலும் களி செய்து சிவனுக்கு படைப்பது வழக்கம். இத்தகைய சிறப்புமிக்க ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றுத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. சிதம்பரம் நடராஜர் கோவில் சன்னதிக்கு எதிர்ப்புறத்தில் உள்ள கொடிமரத்தில் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் உற்சவ ஆச்சாரியார் நடராஜன் தீட்சிதர் கொடியினை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.


அதைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து பஞ்சமுக மூர்த்திகள் வீதி உலா பல்வேறு வாகனங்களில் தினமும் நடைபெற்று வருகிறது. இதில் நாளை 05.01.2023 தேரோட்டம் நடைபெற உள்ளது.இந்த தேரோட்டத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் தனி தனி தேர்களில் எழுந்தருளி அருள் புரிய உள்ளனர். 


இதை தொடர்ந்து நாளை மறுநாள் 6ம் தேதி அன்று விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் ஆருத்ரா தரிசனம் மதியம் 2 மணியளவில் நடைபெற உள்ளது. அப்பொழுது நடராஜர் சிவகாமி சுந்தரி நடனம் ஆடிய படியே பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் புரிய உள்ளனர்.

 

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கு நாளை மறுநாள் (ஜனவரி 6) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

*/