சேப்பாக்கம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் 12 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கோட்டாட்சியர் வழங்கினார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 February 2023

சேப்பாக்கம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் 12 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கோட்டாட்சியர் வழங்கினார்.

IMG-20230225-WA0018
சேப்பாக்கம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் 12 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கோட்டாட்சியர் வழங்கினார். 



கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள சேப்பாக்கம் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. வேப்பூர் வட்டம், நல்லூர் ஒன்றியம் சேப்பாக்கம், கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமிற்கு விருத்தாசலம் கோட்டாட்சியர் (பொறுப்பு) லூர்துசாமி தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார் 



முன்னதாக கிராம நிர்வாக அலுவலர் கலையரசன் அனைவரையும் வரவேற்றார். வேப்பூர் வட்டாட்சியர் அரங்கநாதன், சேப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தெய்வானை தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் 

   

விழாவில் 20 நபர்களுக்கு இலவச மனைபட்டாவும், 5 நபர்களுக்கு முழு புலம் பட்டா மாற்றமும், 57 பயணாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாற்றமும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 7 நபர்களுக்கு உதவி தொகையும், வட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் 7 நபர்களுக்கு குடும்ப அட்டையும், வேளாண்மை துறை சார்பில் 6 நபர்களுக்கு நலத்திட்டம் என மொத்தம் 102 நபர்களுக்கு 12 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் 84 மனுக்கள் பெறபட்டது அதில் 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மற்ற மனுக்கள் பரிசீலனையில் உள்ளது . 


நிகழ்ச்சியில் சமூக நல வட்டாட்சியர் சுமதி, வட்ட வழங்கல் அலுவலர் பூர்ணிமா வினிதா நல்லூர் பிடிஒ, ஜெயக்குமாரி, வேளாண்மை அலுவலர் சிவகாமசுந்தரி , உதவி வேளாண் அலுவலர் விக்னேஸ், தோட்டக்கலை உதவி அலுவலர் கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, துணைத் தலைவர் கட்டிமுத்து, ஊராட்சி செயலாளர் சரவணன் வருவாய் ஆய்வாளர்கள் பழனி, மலர், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜாமணி, அருண், முன்னால் ஒன்றிய கவுன்சிலர் வெங்கடாசலம் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/