கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியம் வேப்பூர் அடுத்த வரம்பனூர் ஊராட்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்
வரம்பனூர் ஊராட்சியில் ஒருங்கினைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கீழ் தேர்வு செய்யபட்ட வரம்பனூர் கிராமத்தில் 7.4 ஹெக்டர் பரப்பளவு கொண்ட 21 விவசாயிகளை உள்ளடக்கிய தரிசு நில தொகுப்பு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் முட்புதர்களை அகற்றும் பனியை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன் ஆய்வு செய்தார்
மேலும் வேளாண் பொறியியல் துறை முலம் நீரின் தன்மை அறிய புவி இயற்பியல் ஆய்வு பணியையும் ஆய்வு செய்தார் , ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் கண்ணையா வேளாண்மை துணை இயக்குநர் ஜெயக்குமார் உதவி இயக்குநர் ராஜசேகரன் வேளாண்மை அலுவலர் சிவகாமசுந்தரி உதவி அலுவலர் விக்னேஷ் மற்றும் வேளாண்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment