கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு மேற்கிலும் காட்டுமன்னார்கோயில் கோவில் கிழக்கிலும் அமைந்துள்ள திருநாரையூர் சோழ நாட்டு வடகறி 33வது தலமாகவும் ஆகாய மார்க்கமாக கந்தர்வன் பறந்து சென்ற போது பழங்களை சாப்பிட்டுவிட்டு கொட்டைகளை கீழே போட அவை மகரிஷி துர்வாச முனிவர் மேல் விழுந்து முனிவர் தவம் கலைந்து பழகொட்டையை பறவை போல் உதிர்த்த நீ நாரையாய் போக கடவது என சாபமிட்டார் நாரையாக மாறிய கந்தர்வன் தினமும் கங்கை நீரை கொண்டு வந்து அபிஷேகம் செய்து சிவபெருமானை வழிபட்டு மோட்சம் பெற்றான்.
அதனால் இந்த ஊர் திருநாரையூர் என்று ஆயிற்று தினமும் பூஜை செய்து வந்த அர்ச்சகர் ஒருநாள் வெளியூர் செல்ல தன் மகனான நம்பியாண்டார் நம்பியை பிள்ளையாருக்கு பூஜை செய்யுமாறு கட்டளையிட்டார் தனது தந்தை கட்டளையை ஏற்ற நம்பியாண்டவர் நம்பி பதார்த்தங்களுடன் பூஜை செய்ய சென்றார் பிள்ளையார் முன் வைத்து நீ சாப்பிட வேண்டும் என கூறினார் நீ சாப்பிடாவிட்டால் கல்லின் மீது மோதி என் உயிரை மாய்ப்பேன் என சொல்லி மோதிக்கொள்ள பிள்ளையார் உடனே நம்பி நிறுத்து நான் சாப்பிடுகிறேன் என காட்சியளித்தார் மேலும் பாடசாலைக்கு செல்ல நேரமாயிற்று நேரம் தாமதமாக சென்றால் எங்கள் ஆசிரியர் தண்டனை தருவார் சொல்ல எல்லா கலைகளும் ஓதித்து அருள் பாலித்தார் பொள்ளாப் பிள்ளையார் ஆட்கொண்ட பெருமையால் நம்பி ஆண்டவர் நம்பியென அழைக்கப்பட்டார்.
தம்மை ஆட்கொண்ட பொல்லாப்புள்ளையார் மீது திரு இரட்டை மணி மாலை எனும் தமிழ் பிரபந்தம் பாடினார், அப்படி பிரசித்தி பெற்ற தலமாக விளங்கிவரும் அருள்மிகு ஸ்ரீ பொல்லாப் பிள்ளையார் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் அருள்மிகு சுயம்பிரகாச ஈஸ்வரர் மற்றும் பரிவார விமான இராஜகோபுரம் கலசங்கள் மகா கும்பாபிஷேகம் ஆனது 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் சரியாக 9:30 மணி அளவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் 1000 மேற்பட்ட பக்த கோடிகள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர் அவர்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது
- தமிழக குரல் இணைய தள செய்திகளுகாகாக செய்தியாளர் P ஜெகதீசன்
No comments:
Post a Comment