கடலூர் மாவட்டம், நல்லூர் வடக்கு ஓன்றிய பாரதிய ஜனதா கட்சி செயற்குழு கூட்டம், வேப்பூர் லெமன் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நல்லூர் ஒன்றிய தலைவர் கந்தன் தலைமை தாங்கினார், ஒன்றிய பொதுசெயலாளர் நல்லூர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
முன்னால் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விவசாய அணி மாநில செயலாளர் வெங்கடாசலம் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்
அப்போது கட்சி கிளையை அனைத்து கிராமத்திலும் ஏற்படுத்தவேண்டும், நல்லூர் வடக்கு ஒன்றியம் விருத்தாசலம் தொகுதிகுட்பட்ட 61 வாக்கு சாவடிகளிலும் உடனடியாக வாக்குசாவடி முகவர்களை நியமிக்க வேண்டும், மத்திய அரசின் திட்டங்கள் செயல்பாடுகளை உடனுக்குடன் மக்களிடையே பிரச்சாரம் செய்யவேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மாரியப்பன் பழனிசாமி, சாமிதுரை, மற்றும் மகளிரணி நிர்வாகிகள், இளைஞரணி, விவசாய அணி, கேந்திர பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment