அப்போது அவரை தலை, இடுப்பு, கை உள்ளிட்ட பல இடங்களில் தாக்கிய போதை ஆசாமிகள் 5000 ரூபாய் பணம் கொடுடா என்று மிரட்டி பணத்தைக் கேட்டுள்ளனர். அப்போது தன்னிடம் பணம் இல்லை என்றும் நான் டெலிவரி மட்டுமே செய்வேன் என்றும் ராதாகிருஷ்ணன் எதார்த்தமாக கூறவே அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத போதை ஆசாமிகள் படம் எதுவும் கிடைக்காது ஆத்திரத்தில் மேலும் அவரை தாக்கிவிட்டு போக்குவரத்து அதிகம் இருந்ததால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மயக்கம் அடைந்த ராதாகிருஷ்ணன் அவ்வழியாக சென்றவர்களின் உதவியோடு ஸ்ரீமுஷ்ணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில் தன்னிடம் பணம் கேட்டு போதை ஆசாமிகள் மிரட்டல் விடுத்து இரும்பு ராடால் தாக்கினர் என்று குறிப்பிடுகிறார். இது சம்பந்தமாக ஸ்ரீமுஷ்ணம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது எனவும், மேலும் போதை ஆசாமிகளின் அத்துமீறல்களும், அலப்பறைகளும் அவர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளும் காவல்துறையால் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment