கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுக்கா டி.பாளையம் அனந்தம் பேட்டை சேர்ந்த சத்தியபாபு என்பவர் வெள்ளையன் மனைவி கருவாச்சி என்கின்ற பெயருள்ள செல்லப்பிராணி பெண் நாய் வளர்த்து வந்தார் அது கருவுற்று குட்டி போடும் நிலையில் உள்ளதால் அவருடைய மனைவியும் அவரும் செல்லமாக வளர்த்து வந்ததால் அது ஒரு பெண்ணாக இருந்தால் எப்படி சீர் வரிசையோடு வளைகாப்பு செய்வார்களோ அதன்படி நாமும் அதற்கு ஒரு வளைகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்து போஸ்டர் அடித்து ஊர் மக்களையும் உறவுகளையும் அழைத்து கருவாச்சி என்கின்ற நாய்க்கு வளைகாப்பு நடத்தினர்.
இதில் இந்த நாய்க்கு சிர் வரிசை தட்டுடன் ஊர்வலமாக எடுத்து வந்து செல்லப்பிராணி கருவாச்சி என்கிற நாய்க்கு வளையல் போட்டு சந்தன நிலங்கு வைத்து விழாவை கொண்டாடினர் பின்னர் தாய் விட்டு சீதனமாக ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி அந்த செல்ல நாய்க்கு அணிவித்தனர் பின்னர் ஊர் பொதுமக்களுக்கும் உறவினர்களுக்கும் மூன்று விதமான சாதங்கள் தயார் செய்து விருந்து வைத்து உபசரித்தனர். இந்நிகழ்ச்சி அப்பகுதி மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து கண்டுகளித்தனர் இச்சம்பவம் இணையதளங்களிலும் ஊடகங்களிலும் வைரலாக பரவி வருகின்றன.
No comments:
Post a Comment