குறிஞ்சிப்பாடி உட்பட்ட பகுதிகளில் உள்ள வெடி பொருட்கள் தயாரிக்கும் குடோன்களில் ஆய்வு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 24 October 2024

குறிஞ்சிப்பாடி உட்பட்ட பகுதிகளில் உள்ள வெடி பொருட்கள் தயாரிக்கும் குடோன்களில் ஆய்வு.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் கோ.சத்திரம், தென்குத்து பார்வதிபுரம், ராசாகுப்பம் நெத்தனாங்குப்பம் ஆகிய இடங்களில் உள்ள வெடி பொருள் தயாரிக்கும் குடோன்களில்  தொழிலாக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் மகேஸ்வரன் தலைமையில் வருவாய் வட்டாட்சியர் அசோகன் மற்றும் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் உத்திராபதி தலைமையிலான குழுவினர் ஆய்வுப் பணி மேற்கொண்டனர். 

எரிபொருள் தயாரிக்கும் குடோன்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட குழுவினர் குடோன்களின் உரிமையாளர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினர், மேலும் தொழிலாளர்கள் தொழிலாளர் நல வாரியத்தில் தங்கள் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர். ஆய்வின் போது வருவாய் துறை மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment

*/