கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் அருள்மிகு ஸ்ரீ அசலாம்பிகை அம்மன் உடனுறை, ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா - திருத்தேர் வீதி உலா மற்றும் அன்னதான விழா நடைபெற்றது.
திருத்தேர் துவக்கி வைக்க வருகை தந்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தார்.
வான வேடிக்கைகளோடு மேளதாளம் வழங்க திருப்பேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.திட்டக்குடி அறநிலைத்துறை தக்கார் ஆய்வாளர் தமிழ்செல்வி ,செயல் அலுவலர் சிவபிரகாசம் கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் உடன் இருந்தனர்
திட்டக்குடி சுற்றியுள்ள கிராமப்புற பொதுமக்கள் சுமார் அவர்களுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இப்பகுதியில் உள்ள பொது மக்கள் தானாக முன்வந்து வெயிலின் தாக்கத்தை உணர்ந்து அன்னதானம்,மோர்,ரத்னா மற்றும் குளிர்பானங்கள் பொது மக்களுக்கு வழங்கினார்கள்.
இதனால் சோர்வடையாமல் தேரை வடம் பிடித்து மகிழ்ச்சியோடு இழுத்துச் சென்றனர்.
No comments:
Post a Comment