கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மருதூர் கிராமத்தில் வள்ளலார் அவதார இல்லத்தில் அவரின் 202வது அவதார தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இதனை முன்னிட்டு குடிமராமத்து நாயகர், முன்னாள் தமிழக முதல்வர், அதிமுக பொதுச் செயலாளர் அவர்களின் உண்மை விசுவாசிகளால் துவக்கப்பட்ட கடலூர் மாவட்ட எடப்பாடியார் மக்கள் நல பேரவை சார்பில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் பங்கேற்று கண் குறைபாடுகள் தொடர்பாக பரிசோதனை, மருத்துவ ஆலோசனை பெற்றனர். இந்த கண் சிகிச்சை முகாமை கடலூர் மாவட்ட எடப்பாடியார் மக்கள் நல பேரவை மாவட்டத் தலைவர் எஸ்.ஜி. ஆறுமுகம், மாவட்ட செயலாளர் எம். கே .பார்த்திபன், மாவட்ட துணை செயலாளர் ரகோத்மன், மாவட்ட துணை செயலாளர் ஆல்பர்ட், மருதூர் கிளை செயலாளர்கள் சக்திவேல், ரமேஷ் உள்ளிட்ட பலரும் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினர். இதில் மேல் சிகிச்சைக்காக பலர் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment