கடலூர் மாவட்டம் புவனகிரி ஊராட்சி ஒன்றிய புதிய தலைவர் குழுவானது அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியப் பெருந்தலைவர் சி.என்.சிவபிரகாசம், அதிமுக துணைத் தலைவர் வாசுதேவன் ஆகியோர் மற்றும் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்கள் இணைந்து கடந்த ஜனவரி 11-01-2020ல் பதவி ஏற்றனர். அதன் பதவிக் காலம் ஐந்தாண்டு நடைபெற்று தற்போது நிறைவு பெற உள்ளதை முன்னிட்டு ஊராட்சி ஒன்றியக் குழுவின் நிறைவுக் கூட்டம் அதிமுக ஒன்றியப் பெருந்தலைவர் சி.என். சிவப்பிரகாசம் தலைமையில் தற்காலிக அலுவலகக் கட்டிடத்தில் நடைபெற்றது.
இதில் அதிமுக துணைத்தலைவர் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் அலுவலகப் பணியாளர்கள் என பலர் பங்கேற்றனர். அப்போது கடந்த ஐந்தாண்டு காலமும் ஒன்றியக் குழுவுக்கு சிறப்பாக ஒத்துழைப்பு தந்த ஒன்றியக் குழு கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில் புவனகிரி அதிமுக செயலாளர் செல்வகுமார், கிழக்கு ஒன்றியச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment