கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள கருங்குழி கிராமத்தில் வடலூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது 40 ஆண்டுகள் பழமையான இக்கட்டிடம் மிகவும் சிதலமடைந்து சிமெண்ட் கான்கிரீட் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் பீதி அடைந்து வருகின்றனர்.
மேலும் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் சுகாதார நிலையம் முன்பு தண்ணீர் தேங்கியவாறு உள்ளது இதனால் துணை சுகாதார நிலையத்திற்கு உள்ளே செல்ல முடியாமல் செவிலியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடம் என்பதால் செவிலியர்கள் சுகாதார நிலையத்தை பயன்படுத்தாமல் அருகில் உள்ள ஏதேனும் ஒரு வீட்டில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர், உயிர் சேதம் ஏற்படும் முன் சுகாதார நிலையத்தை சரி செய்ய வேண்டும் என்று சுகாதார நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி 8667557062.

No comments:
Post a Comment