உடல் உறுப்புகள் தானம் வழங்கிய ஹேமலதா உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 9 November 2024

உடல் உறுப்புகள் தானம் வழங்கிய ஹேமலதா உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.


உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னனி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. குடும்ப உறுப்பினர்கள் மரணம் அடைந்த துயரச் சூழலில் அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால் தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. 


தன் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களை காப்போரின் தியாகத்தினை போற்றிடும் வகையில் இறக்கும் முன் உறுப்புதானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதை வழங்கிட வேண்டும் என  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உத்திரவிடப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், ஆபத்தாரணபுரம் கிராமத்தை சேர்ந்த  ஹேமலதா க/பெ தனசேகரன் (வயது-34) என்பவர் மூளைச்சாவு அடைந்து கடந்த 08.11.2024 அன்று இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தநிலையில் அவரது உறவினர்களால்  ஹேமலதா அவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து  வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் அன்னாரது உடலிற்கு இன்று 09.11.2024 மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அசோகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உடலுறுப்புதானம் செய்தவர் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

*/