சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள அகர ஆலம்பாடி கிராமத்தில் நான்கு கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 October 2024

சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள அகர ஆலம்பாடி கிராமத்தில் நான்கு கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது அகர ஆலம்பாடி கிராமம். இக்கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீ சந்நியாசியப்பன், ஸ்ரீசெல்வகணபதி, ஸ்ரீ வீரன், ஸ்ரீ மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் அமைத்து கும்பாபிஷேகம் செய்யும் பொருட்டு அகரஆலம்பாடி கிராமத்தினரால் முடிவு செய்யப்பட்டு அதற்கான கோவில் புணரமைப்பு வேலைகள் சீரும் சிறப்புமாக நடைபெற்றுவந்தது. 

அதற்கான பூர்வாங்க  வேலைகள்  முடிவடைந்து 20/10/2024 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை மகா மந்திரங்கள் ஓதப்பட்டு பூஜை செய்யப்பட்ட புனித நீர் கலசம் யாகசாலையில் இருந்து வேத விற்பன்னர்களால் மேலதாள வாத்தியங்களோடு  கோவில் கோபுரத்திற்கு சுமந்து செல்லப்பட்டு காலை எட்டு முப்பது மணி அளவில் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு ஜீர்ணோத்தரண  மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இந்த நான்கு ஆலயங்களின் கும்பாபிஷேகக் காட்சியைக் காண்பதற்கு ஆலம்பாடி கிராமம் மற்றும் அதன் அருகே உள்ள ஆதனூர், வீரமுடையாநத்தம், சின்ன குப்பம், பெரிய குப்பம், முகந் தரியான்குப்பம், சேத்தியாத்தோப்பு மற்றும் பல கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்திருந்து கும்பாபிஷேகக் காட்சியைக் கண்டுகளித்து  ஸ்ரீசன்னியாசியப்பன், ஸ்ரீசெல்வகணபதி, ஸ்ரீவீரன், ஸ்ரீமாரியம்மன் ஆகிய தெய்வங்களின் அருளாசியைப் பெற்றனர். 

கும்பாபிஷேகத் திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் கும்பாபிஷேகவிழாக் குழுவினரால்  சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

*/