கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்க தமிழக அரசால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொழில் வணிகத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக வியாபாரம் தொடர்பான தொழில்களுக்கு மட்டும் 5 லட்சம் வரையிலான திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியத்துடன் கூடிய கடன் தொகை வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 வருடம் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் குறைந்த பட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் பொதுபிரிவினர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்இதர பிரிவினர், பெண்கள், ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் இக்கடன் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகத்தில் வருகிற ஜூலை 6-ந் தேதி காலை 10 மணியளவில் இக்கடன் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல்நடை பெறவுள்ளது. மேலும், ஆதிதிராவிடர் , பழங்குடியினர், சிறுபான்மையினர், ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் ஆகியோர்களுக்கு மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்க வழிகாட்டுதல் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04142- 290116 மூலம் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டிருந்தது
No comments:
Post a Comment