கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சோழத்தரம் கிராமத்தில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி-தஞ்சை நான்கு வழி சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதைக் கண்டித்தும் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக வானமாதேவி, வட்டத்தூர், தண்டேஸ்வரநல்லூர், குமாரக்குடி மற்றும் சோழத்தரத்தில் இடிக்கப்பட்ட ரேஷன் கடை மற்றும் வாட்டர் டேங்க் வீடுகள் அனைத்தையும் கட்டிக் கொடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடஏற்பாடும் செய்து தர வேண்டும் எனவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட செயற்குழு தேன்மொழி தலைமையில் சாலை மறியல் செய்தனர்.மாவட்டக் குழு பிரகாஷ் ஸ்ரீமுஷ்ணம் வட்டச் செயலாளர் தினேஷ் பாபு, வட்டக் குழு வெற்றி வீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து பலரின்உயிரை காவு வாங்கி வரும் இந்த சாலை விரிவாக்கப் பணிகளால் இப்பகுதிகளில் உள்ள கிராம மக்கள் அவதி அடைந்து வருவதாகவும் உடனடியாக சாலை விரிவாக்கப்பணியை விரைந்து முடித்திட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து கண்டன கோஷங்கனை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்ட நிகழ்ச்சியில் ஏ ஐ கே எஸ் ஆதிமூலம், பாண்டுரங்கன், சோழவரம் குமார்,கிருஷ்ணமூர்த்தி, விஜயகாந்த், தங்கசாமி, சுப்பிரமணியன், குமார், தேவேந்திரன் மற்றும் நமச்சிவாயம், கிருஷ்ணமூர்த்தி, காசிராஜன், ராதா, ராமு, ஏ.சுப்பிரமணியன், வளர்மதி, சுபாஷ், வெற்றி முருகன், பிச்சம்மாள், லதா உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர். இவர்கள்அனைவரும் கைது செய்யப் பட்டு பின்பு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment