சுவாமி சகஜானந்தா 133வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 January 2023

சுவாமி சகஜானந்தா 133வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கடலூர் மாவட்டம் சுவாமி சகஜானந்தா 133வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் 


இன்று 27.01.2023 சுவாமி சகதானந்தா அவர்களின் 131 வது பிறந்த நாளினை கொண்டாடும் வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் அமைந்துள்ள சுவாமி சகஜானந்தா  அவர்களின் நினைவு மண்டபத்தில் உள்ள  திரு உருவச் சிலைக்கு அரசின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் டி எஸ் ஜவகர் மாவட்ட ஆட்சித் தலைவர்  பாலசுப்பிரமணியம் இ ஆ ப அவர்கள் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சே சிந்தனைச் செல்வன் சிதம்பரம் உதவி ஆட்சியர்  சுவேதா சுமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


சுவாமி சகஜானந்தா தமிழ்நாட்டில் ஆரணியை அடுத்து உள்ள மேல்புதுப்பாக்கம் என்னும் சிற்றூரில் 1890 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 27ஆம் நாள் ஆதிதிராவிடர் குடும்பத்தில் பிறந்தார் குழந்தை பருவத்தில் இருந்து ஆன்மீகத்தில் ஆர்வம் மிக்கவராக இருந்தார் காஞ்சிபுரத்தில் உள்ள தட்சிண சுவாமி  என்பவரின் இடம் பல ஆன்மீக விஷயங்களை கற்றார் பின்னர் வியாசர்பாடியில்  இருந்த கரபாத்திர சுவாமிகளின் குருகுலத்தில் சேர்ந்தார் இவரே தன் சீடருக்கு சுவாமி சகஜானந்தார் என்று பெயர் சூட்டினார். 


சமூக நலனில் அக்கறை கொண்ட அனைத்து சமூக மக்களும் இவருக்கு உதவினர் 1916 ஆம் ஆண்டு நந்தனார் கல்வி கழகத்தை தொடங்கினார் இலங்கை பர்மா ரங்கூன் மலேசியா சிங்கப்பூர் சென்று உரையாற்றி நிதி திரட்டினார் ஒரு சில ஆண்டுகளிலே மேலும் ஏழு ஊர்களின் இதன் கிளைகளை தொடங்கி அங்கெல்லாம் மாணவர்களுக்கு படிப்பு ஆன்மீக ஞானம் தொழிற்கல்வி தமிழிசை அனைத்தையும் போதித்தார் 1929 இல் மாணவர் இல்லம் 1930 இல் மாணவியர் விடுதியும் தொடங்கினார். 


தனது சமூக மக்களின் நலனுக்காக அரசியல் ஈடுபட்டார் தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைகளையும் நிவாரணங்களையும் பெற்று தந்தார் இவரது அயராத முனைப்பாலும் மற்றும் பலரது போராட்டங்களாலும் 1947 இல் அனைவரும் ஆலயத்துக்கு சென்று வழிபடலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட சுவாமி சகஜானந்தா 1959 ஆம் ஆண்டு தனது 69 வது வயதில் மறைந்த அவரை நாம் நினைவு கூற வேண்டும்  என்று கூறி 


இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலக மற்றும் பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

*/