அப்போது செல்வத்துரை ரத்த காயத்துடன் கீழே விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்து அப்பகுதிக்கு வந்த செல்வத்துரையின் உறவினர்கள் மற்றும் மஞ்சக்கொல்லை கிராம மக்கள் அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அதற்குள் இந்த செய்தியை கேள்விப்பட்ட புவனகிரி காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்களும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். தாக்கப்பட்டதில் முகமெல்லாம் ரத்தக்களறியாகி படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வத்துரைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செல்வத்துரை அளித்த புகாரின் பேரில் அவரைத் தாக்கிய இளைஞர்கள் சரவணமூர்த்தி (26), கவிவர்மன் (21), அன்புராஜ் (24), கதிரவன் (25), பிரேம்குமார் (22), விக்ரம் (24) ஆகிய ஆறு பேரை புவனகிரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் இந்த தாக்குதலில் ஈடுபட்ட இன்னும் சிலரை வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும் என்று தாக்கப்பட்டவரின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் புவனகிரிப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment