கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஸ்ரீ ஆதிவராக நல்லூர் ஊராட்சியில் 11 அம்ச கோரிக்கை வலியுறுத்தி புரட்சிகர கட்சி நடத்தும் சாலை மறியல் இன்று வட்டாட்சியர் சேகர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஸ்ரீ ஆதிவராக நல்லூர் ஊராட்சியில் வீட்டு மனை இல்லாதவருக்கு ஏரிக்கரையில் இருப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும்.
ஸ்ரீ ஆதிவராக நல்லூர் ஆதிதிராவிடர் தெருவுக்கு தனி பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும் இதே போல் பதினொரு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் நடத்துவதாக இருந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வட்டாட்சியர் பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் ஆகியது இதில் புரட்சிகர சோசியலிச கட்சி தமிழரசன்மாவட்ட செயலாளர் பட்டுசாமி, மாவட்ட செயற்குழு சசிகுமார் மற்றும் சதீஷ் சீனிவாசன் ராஜாராமன் சத்யராஜ் மற்றும் பாமக மாநில செயற்குழு ஆ.செ.வெற்றிவேல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ராஜேந்திரன் பாலு நகர நிர்வாகி விசிக கட்சி சார்பிலும் ஆதிவராக நல்லூர் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டு பேச்சுவார்த்தையில் நடைபெற்றது.
No comments:
Post a Comment