கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீமுஷ்ணம் மேற்கு ஒன்றியம், ஸ்ரீமுஷ்ணம் நகர அமைப்பினர் ஆகியவை இணைந்து நடத்திய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகர செயலாளர் பூமாலை கேசவன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றிய அவைத் தலைவர் பரமானந்தம் முன்னிலை வவகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித்தேவன், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், சிதம்பரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. பாண்டியன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ப. மோகன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினருமான என். முருகுமாறன், அம்மா பேரவை செயலாளர் கானூர் பாலசுந்தரம், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் ஆகியோர் பங்கேற்று கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து சிறப்புரையாற்றிப் பேசினர். இந்த கூட்டத்தில் ஸ்ரீமுஷ்ணம் மேற்கு ஒன்றியம், ஸ்ரீமுஷ்ணம் நகர கழகம் சார்பில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment