கடலூர் மாவட்டம் , விருதாச்சலம் அருகில் உள்ள பெரியவடவாடியில் இயங்கிவரும் செந்தில் கல்வி நிறுவனங்களில் 74ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் தேசப்பற்றை ஊக்குவிக்கும் வகையில் தமிழர் பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் முறைகள் மற்றும் தேச தலைவர்களின் சிந்தனையை பிரதிபலிக்கும் வண்ணமாக சிறப்பு பேரணி நடைபெற்றது.
இப் பேரணிக்கு செந்தில் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலரும் தாளாளருமான திவ்யா தலைமைதாங்க, விருத்தாச்சலம் வட்டாட்சியர் திரு தனபதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் ஒற்றுமையை வலியுறுத்தும் வாசகங்களும் , சிலம்பாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், கும்மியடித்தல், தேசத் தலைவர்கள் மற்றும் தமிழர் கலாச்சாரம் சார்ந்த வேடங்கள் இட்டு இப்பேரணி மூலம் பொதுமக்களிடம் தேசப்பற்றை ஊக்குவிக்க தூண்டினர்.
இந்நிகழ்வில் செந்தில் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர்களான திரு. ஜி.டி. தங்கராஜு, வைத்தியநாதன்,திருமதி. கவிதா தங்கராஜு, வை. பிரதீப், பள்ளியின் முதல்வர் என் எஸ் ராமநாதன், கல்லூரி முதல்வர் முனைவர் முத்து பன்னீர்செல்வம், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் இல்லா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர். இப்பேரணி விருத்தாசலம் விருதகிரிஸ்வரர் கோவிலில் தொடங்கி கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரி வாயில் முன்பு வரை நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment