நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகின்ற 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது இந்நிலையில் விபத்தில்லா தீபாவளி பண்டிகை கொண்டாடும் விழிப்புணர் நிகழ்ச்சி வடலூர் புதுநகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அசோகன் தலைமையில் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் உத்திராபதி மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பான முறையில் எப்படி பட்டாசு வெடிப்பது பட்டாசு வெடிக்கும் பொழுது தீக்காயம் ஏற்பட்டால் உடனே எப்படி முதலுதவி சிகிச்சை செய்வது குறித்த செய்முறை விளக்கங்களை செய்து காண்பித்தனர்.
மேலும் விபத்தில் தான் தீபாவளி பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது, இதில் சுமார் 500 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புடன் இருப்பாம், விபத்தினை தவிர்ப்பாம் என உறுதிமொழி ஏற்றனர்.
No comments:
Post a Comment