கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கிளாங்காடு கிராமத்தில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ அங்காளம்மன், ஸ்ரீ பாவாடைராயன்,சப்த கன்னிமார்கள்,கருப்பசாமிஆகிய ஆலயங்கள் பழமை வாய்ந்ததாக மரத்தடியில் இருந்து வந்த நிலையில் இதனைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்திட ஊர் முக்கியதஸ்தர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில் அப்பணிகள் முடிவுற்றபின் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.அதனை முன்னிட்டு யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர் கலசங்களுக்கு மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, மிருத்சங்கரஹணம் ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்று கடம் புறப்பாடு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீர் கலசங்கள் கோவில் தெய்வங்களான ஸ்ரீ அங்காளம்மன்,ஸ்ரீ பாவாடைராயன், சப்த கன்னிமார்கள், கருப்பசாமி ஆகியோரின் மேல் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவைக் காண கிளாங்காடு, சென்னி நத்தம், சேத்தியாத்தோப்பு, சக்திவிளாகம், பின்னலூர், அள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் இருந்து பெருந்திரளான மக்கள் வருகை தந்து கும்பாபிஷேகத்தில் சாமிதரிசனம் செய்து அம்மன் அருளைப் பெற்றனர்.
No comments:
Post a Comment