கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே எறும்பூர் கிராமத்தில் புவனகிரி விருத்தாசலம் சாலையில் சாலை ஓரமாக நின்றிருந்த டாட்டா ஏஸ் வாகனத்தின் மீது நாமக்கல்லில் இருந்து சிதம்பரம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று மோதியது.அப்போது டாட்டா ஏஸ் வாகனமானது சாலையோரமாக துப்புரவு பணிகளை மேற்கொண்டிருந்த துப்புரவு பணியாளர் மீது மோதியும் நிற்காமல் மேலும் இரு சக்கர வாகனத்திலும் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் துப்புரவு பணியாளர் லட்சுமி என்பவர் படுகாயத்துடன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் டாடா ஏஸ் வாகனம் மற்றும் இருசக்கர வாகனம், சொகுசு கார் ஆகியவை கடுமையாக சேதம் அடைந்தன. விபத்து குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment