கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பு.ஆதனூர் கிராமத்தில் வயல்வெளிப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தக் கடையால் கிராமப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும், காலி மது பாட்டில்களை உடைத்து வயல்வெளிகளில் போடுவதால், வயல்கள் பாதிப்படைவதாகவும் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை அப்படியே போட்டு விட்டு செல்வதாலும் அதிக அளவில் குப்பைகள் சேருவதாகவும் இதனால் சுற்றுப்புற சூழல் பாதிப்படைவதாகவும் கூறி விவசாயிகள், கிராம மக்கள் குற்றச்சாட்டு கூறிவந்த நிலையில் இன்று டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கடையை அகற்றுவதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்ததையடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
Post Top Ad
Saturday, 2 November 2024
சேத்தியாத்தோப்பு அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகைப் போராட்டம்.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கடலூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment