கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் அள்ளூர் கிராமத்தில் இருந்து சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு வரை கடைவீதியை தவிர்த்து ஏனைய மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் ஓரங்களில் இரண்டு பக்கமும் காட்டுகருவேல முட்புதர்கள் உள்ளன.இந்த முட்கள் கனரக வாகனங்களில் உரசி உரசி அதன் முனையானது மிகவும் கூர்மையாக உள்ளது.எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக இருசக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்கிச் செல்லும் போது கருவேல முட்கள் அடித்தும் கண்களில் குத்தியும் காயம் ஏற்பட்டு வருகிறது.
அது மட்டுமல்லாமல் இதன் பக்கத்தில் வாய்க்கால் செல்வதால் வாகனங்கள் ஒதுங்கிச் சென்றால் திடீரென வாகனம் வாய்க்காலில் இறங்கி மிகப்பெரிய விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இந்தப் புதர்களை அகற்ற வேண்டும், சாலையின் இரண்டு பக்க ஓரங்களை பராமரிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறையிடம் கோரிக்கை வைத்த நிலையிலும் நெடுஞ்சாலைத் துறையினர் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
தினசரி இதனைக் கடந்து அலுவலக வேலைகளுக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் இன்னலை போக்கும் விதத்தில் நெடுஞ்சாலைத்துறை அலட்சியம் காட்டாமல்உடனடியாக சாலையில் இரண்டு பக்க ஓரங்களிலும் இருக்கும் முட்புதர்களை மற்றும் பலவித செடிகளை அகற்றி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது வாகன ஓட்டிகள் மற்றும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
No comments:
Post a Comment