விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு செயற்குழு கூட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 September 2024

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு செயற்குழு கூட்டம்.


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு செயற்குழு கூட்டம் வடலூர் தனியார் திருமண மன்டபத்தில் நடைபெற்றது, கடலூர் மைய மாவட்ட செயலாளர் நீதி வள்ளல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மற்றும் கள்ளகுறிச்சி மண்டல அமைப்பாளர் பா.தாமரைசெல்வன்  கலந்து கொண்டு சிறப்புறையாற்றினர்.

கூட்டத்தில் வருகின்ற அக்டோபர் 2 தேதி ஊளூந்தூர்பேட்டையில் நடைபெற உள்ள மது ஒழிப்பு மாநாட்டில் விசிகவினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது, மேலும் மதுவினால் ஏற்படும் தீமைகள் மற்றும் போதை பொருட்களால் இளஞ்சிரார்கள் பாதிக்கப்படுவது குறித்து பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்துறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


தொடர்ந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட மகளிர் அணி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டனர், நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி, வடலூர் பகுதிக்குட்ப்பட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/