நெய்வேலி தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் இயங்கும் பண்ணைகளை வேளாண்மை துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 8 November 2024

நெய்வேலி தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் இயங்கும் பண்ணைகளை வேளாண்மை துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட நெய்வேலி தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் இயங்கும் பண்ணைகளை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன், கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


ஆய்வின்போது, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரவித்ததாவது, நெய்வேலி தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் சுமார் 240 எக்டர் பரப்பில் இரண்டு பண்ணைகளை உள்ளது. 350 எக்டர் பரப்பளவில் மாநில தென்னை நாற்றாங்கால் பண்ணையும், 100 எக்டர் பரப்பளவில் கொய்யா, மா, பலா, முந்திரி மற்றும் காய்கறிகள் விளையும் அரசு தோட்டக்கலை பண்ணையும் உள்ளது. 


மேலும், அரசு தோட்டக்கலை பண்ணை ஆய்வின் போது பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் குழித்தட்டு நாற்றுகள், ஒட்டுச்செடிகள். பழக்கன்றுகள் ஆகியவற்றினை தரமான முறையில் உற்பத்தி செய்து துறை மூலம் செயல்படுத்தப்படும் தேசிய தோட்டக்கலை இயக்கம். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் தரமான முறையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.


தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக இயங்கி வரும் மாநில தென்னை நாற்றாங்கால் பண்ணையில் நெட்டை ரகம் மற்றும் நெட்டை குட்டை ரகம் என இரண்டு வகை தென்னை மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. விவசாயிகளின் தேவைகளை பொறுத்து நெட்டை ரகம் ரூ.65-இக்கும், நெட்டை குட்டை ரகம் ரூ.125-இக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தென்னை உற்பத்தியில் தமிழகம் முன்னனி மாநிலமாக உயர்த்திட இத்திட்டம் சிறப்பான முறையில் பயன்படுகிறது. 



அரசு தோட்டக்கலை பண்ணையில் உயரிய ஒட்டுரக கன்றுகள் வளர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது. 200 கன்றுகள் முதல் 400 கன்றுகள் வரை வழங்கப்படுகிறது. இதன்மூலம் பழவகை உற்பத்தி செய்ய விரும்பும் விவசாயிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது. தமிழக அரசு விவசாயிகளின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்திசெய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் கடைகோடி விவசாயிக்கும் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும். 


மேலும், மழைக்காலம் என்பதால் அனைத்து கன்றுகளுக்கும் இயற்கை உரங்களை செலுத்தி நல்ல முறையில் வளர்த்து விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என  வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார். ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் அருண், வேளாண்மைத் துறை துணை இயக்குநர் என்.செல்வம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.கொ.நாகராஜபூபதி உட்பட பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

*/