ரோட்ட காணோம்... வெறும் ஜல்லி மட்டுமே..? சாலை அமைத்ததாக கல்வெட்டு வைத்த ஊராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 August 2026

ரோட்ட காணோம்... வெறும் ஜல்லி மட்டுமே..? சாலை அமைத்ததாக கல்வெட்டு வைத்த ஊராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட வானதி ராயபுரம் ஊராட்சியின் ஆர்.கே. சிட்டி பகுதியில், சாலை வசதி இல்லாததால் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனர்.


பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் உள்ளிட்டோர் தினமும் சிரமத்துடன் பயணித்து வருகின்றனர். கடந்த ஆட்சியில் ஒரு தெருவிற்கு மட்டும் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு, அதற்கான கல்வெட்டு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


சாலை அமைக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், “சாலை இன்னும் ஊராட்சியிடம் ஒப்படைக்கப்படபட்ட வில்லை” என்று நிர்வாகம் தெரிவித்ததாக 

பொது மக்கள் கூறுகின்றனர். ஆனால், ஒரு தெருவிற்கு மட்டும் எப்படி சாலை அமைக்கப்பட்டது. என்ற கேள்வி எழுந்த போது, அங்கிருந்த கல்வெட்டு அகற்றப்பட்ட தாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. 


மேலும், ஆர்.கே. சிட்டி முதல் கல்லுக் குழி வரை அமைக்கப் தற்காலிக ஜல்லி சாலை, மழையால் சேதமடைந்து தற்போது வெறும் ஜல்லிக்கற்கள் மட்டுமே தெரியும் நிலையில் உள்ளது.


எனவே, சாலை அமைத்ததாக கல்வெட்டு வைப்பதை விட, தரமான தார்ச் சாலை அமைத்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சிநிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

*/