ஊராட்சி நிர்வாகத்தின் புதிய டெக்னாலஜி 24 நேரமும் தடையின்றி எரியும் மின் விளக்குகள்..! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 7 August 2026

ஊராட்சி நிர்வாகத்தின் புதிய டெக்னாலஜி 24 நேரமும் தடையின்றி எரியும் மின் விளக்குகள்..!

 


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆர் கே சிட்டி பகுதியில் கடந்த ஆறு மாத மின்விளக்குகள் அனைத்தும் பழுதடைந்து பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது இதுகுறித்து செய்தி வெளியான நிலையில் ஊராட்சி நிர்வாகத்தால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தெருவிளக்குகள் அனைத்தும் சரி செய்யப்பட்டது 

இந்நிலையில் பழைய தெரு விளக்குகள் அனைத்தும் ஆன் ஆஃப் செய்யும் வகையில் ஒவ்வொரு தெருவிளத்திற்கும் ஸ்விட்ச் வைக்கப்பட்டு இருந்தது ஆனால் தற்பொழுது பகுதி மக்கள் சார்பில் தெருவிளக்கு எரியவில்லை என்ற புகார் எழுந்ததை அடுத்து ஊராட்சி நிர்வாகம் சீரமைக்கப்பட்ட தெருவிளக்குகளில் குறிப்பிட்ட ஒரு சில தெரு விளக்குகளுக்கு மட்டும் ஆன் ஆப் செய்யும் சுவிட்ச் மற்றும் வயர்களை அகற்றிவிட்டு பகல் மற்றும் இரவு நேரங்களில் 24 மணி நேரமும் தொடர்ந்து எரியும் வகையில் தெரு விளக்குகளை அமைத்துள்ளது 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் ஊராட்சி நிர்வாகத்தின் செயல் பொதுமக்கள் மத்தியில் முகசூழிப்பை ஏற்படுத்தி உள்ளது பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து எரியும் மின்விளக்குகளால் மின்விளக்குகள் அனைத்தும் சீக்கிரம் பழுதாவதோடு அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது என அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர் 

புகார் தெரிவித்ததின் அடிப்படையில் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளாமல் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மின்விளக்குகளை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

*/