சிதம்பரம் அருகே உள்ள சி முட்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் ஐயப்பன் (வயது28) இவர் எலக்ட்ரிசியன் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் ஐயப்பன் கீழ மூங்கில் அடி கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி சி முட்லூரில் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார் இந்த நிலையில் ஐயப்பன் 16வயது சிறுமியை கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி ஐயப்பனிடம் பேசுவதை தவிர்த்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ஐயப்பன் நேற்று காலை சி முட்லூர் உள்ள சிறுமி வீட்டிற்கு சென்ற ஐயப்பன் அங்கு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கையில் வைத்திருந்த பேனா கத்தியால் சிறுமியின் கை ,கழுத்து,முதுகு உள்ளிட்ட பகுதிகளில் கிழித்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.இதில் படுகாயம் அடைந்த சிறுமியை உறவினர்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .
தப்பி ஓடிய ஐயப்பனை சிதம்பரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் அப்புதுறை வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஐயப்பனை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment