சேத்தியாத்தோப்பு அருகே ஸ்ரீ கிழக்கு செல்லியம்மன், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ பொறையான் கோவில்களின் மகா கும்பாபிஷேகம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 July 2026

சேத்தியாத்தோப்பு அருகே ஸ்ரீ கிழக்கு செல்லியம்மன், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ பொறையான் கோவில்களின் மகா கும்பாபிஷேகம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு.


கடலூர், ஜூலை 5:


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே தெற்கு விருதாங்கன் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கிழக்கு செல்லியம்மன், ஸ்ரீ செல்லியம்மன் மற்றும் ஸ்ரீ பொறையான் கோவில்களின் மகா கும்பாபிஷேக விழா பக்தர்களின் திரளான பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. கிராம மக்களும் பக்தர்களும் இணைந்து கோவில்களின் திருப்பணிகளை மேற்கொண்டு, மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்திருந்தனர். அதன்படி, திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஆகம விதிகளின்படி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.


விழாவையொட்டி, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்கள் யாகசாலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மங்கள இசையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து விநாயகர் பூஜை, அனுக்ஞை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு வேத சடங்குகள் நான்கு காலங்களாக நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் கடம் புறப்பாடாக மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோவில்களின் விமான கோபுரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.


பின்னர், முதலில் ஸ்ரீ கிழக்கு செல்லியம்மன், தொடர்ந்து ஸ்ரீ செல்லியம்மன் மற்றும் ஸ்ரீ பொறையான் கோவில்களின் கோபுர கலசங்கள் மீது வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து, மூலவர்களை வழிபட்டு தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.


இந்த மகா கும்பாபிஷேக விழாவில் தெற்கு விருதாங்கன் கிராம மக்கள் மட்டுமின்றி, சேத்தியாத்தோப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

No comments:

Post a Comment

*/