கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே செங்கல்மேடு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் ஆண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு முன்பு கணபதி பூஜையுடன் ஆரம்பித்து காப்பு கட்டி விழா தொடங்கியது. இதன் பின்னர் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று வந்தன. இதன் பின்னர் பால்குட ஊர்வலம் அபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில், விழாவின் சிகர நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக அம்மன் கோவில் முன்பு உருவாக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில், செங்கல்மேடு கிராமத்தின் குளக்கரையில் புனித நீராடிய பக்தர்கள், பூங்கரகம் சுமந்து மேளதாளங்கள் முழங்க கிராமத்தின் வீதிகளில் ஊர்வலமாக வருகை தந்தனர். பின்னர் கோவில் முன்பாக உருவாக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தி கோஷம் முழங்க இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் பக்தர்களுக்கு அம்மன் கத்தி மேல் நின்று அருள்வாக்கு கூறினார். இதன் பின்னர் மகாதீபாரதனை கட்டப்பட்டு பக்தர்களுக்கு கோவில் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவிற்கு கிராம மக்கள் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த பெருந்திரளான பக்தர்களும் பங்கேற்று மூலவரை வணங்கியும் சென்றனர்.

No comments:
Post a Comment