சர்க்கரை ஆலை நிர்வாக தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என வேதனை.. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 24 July 2026

சர்க்கரை ஆலை நிர்வாக தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என வேதனை..

 


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பு எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை பருவ கால தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் தங்களுக்கு நிரந்தர பணி வழங்க கோரிக்கை வைத்து இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டு தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தால் எந்தவித பதிலும் சொல்லாமல் வேறு விஷயங்களை மாற்றி பேசி தங்களது பிரச்சனைக்கு தீர்வினை தராமல் இழுத்தடிப்பதாகவும், தங்களுடைய வாழ்வாதாரத்தை அழிப்பதாகவும் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். ஏற்கனவே நடைபெற்ற பல கட்ட பேச்சு வார்த்தையில் எந்தவிதமான உடன்பாடும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட தொழிலாளர் தரப்பினர் ஆலை நிர்வாகத்திடம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும், அவர்கள் தங்களுக்கு பணி வழங்கி தீர்வு காண்பதற்கான முகாந்திரம் இல்லாமல் இருப்பதாகவும், இதனால் தங்களுக்கு வேறு வழியே இல்லாமல் தொடர் உண்ணாவிர போராட்டத்தை கையில் எடுப்பதாகவும் குறிப்பிடுகின்றனர். தீர்வு கிடைக்கவில்லை எனில் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் அவர்கள் வேதனையோடு குறிப்பிட்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

*/