பூதங்குடி கிராமத்தில் நடைபெற்ற 22 ஆம் ஆண்டு பறக்கும் காவடி, அலகு காவடி, பால்குட ஊர்வலம்.. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 July 2026

பூதங்குடி கிராமத்தில் நடைபெற்ற 22 ஆம் ஆண்டு பறக்கும் காவடி, அலகு காவடி, பால்குட ஊர்வலம்..

 


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆதி விநாயகர் ஸகித ராஜ சக்தி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் 22 ஆம் ஆண்டு கோவில் திருவிழா சில தினங்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் ஆரம்பித்தது, இந்நிலையில் தினமும் சுவாமி வீதி உலா, அபிஷேகங்கள், அலங்காரங்கள் பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் சிகர நிகழ்வான பறக்கும் காவடி, அலகு காவடி உடன் துள்ளல் ஆட்டததுடன் காளி வேடம் அணிந்த பக்தர்கள்முன் செல்ல, தங்களது வேண்டுதல் நிறைவேற்றும் பொருட்டு  பால்குடம் சுமந்த பக்தர்கள் ஏராளமானோர் வீராணம் ஏரிக்கரை முகப்பிலிருந்து பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு வான வடிக்கைகள் முழங்க கிராமத்தின் வீதிகளின் வழியாக பக்தி கோஷமுழங்க சென்றனர். பின்னர் கோவில் முகப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு மூலவர் ஆதி விநாயகர் ஸகித ராஜ சக்தி ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து மகாதீபாரதனை கட்டப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் விழா குழுவினரால் வழங்கப்பட்டது. இந்த 22 ஆம் ஆண்டு விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த திரளான பக்தர்களும், கிராம மக்களும் பங்கேற்று ஆதி விநாயகர் ஸகித ராஜ சக்தி ஸ்ரீ மகா மாரியம்மனை வணங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்று வேண்டி மனமுருக வேண்டினர்.

No comments:

Post a Comment

*/