நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் இந்தியத் தலைநகர் டெல்லியில் மாணவர்கள் அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராடி வரும் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சிதம்பரம் கஞ்சித் தொட்டி பெரியார் சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்குச் சங்கத்தின் பொருளாளர் ராணி தலைமை தாங்கினார்.
மாலை 5:30 மணி முதல் இரவு 8:50 மணி வரை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். அசம்பாவிதங்கள் ஏதுமின்றி போராட்டம் அமைதியான முறையில் நிறைவுற்றது.

No comments:
Post a Comment