இராஜ முத்தையா மாவட்ட மருத்துவ மனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் சந்தித்து கோரிக்கை.. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 27 July 2026

இராஜ முத்தையா மாவட்ட மருத்துவ மனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் சந்தித்து கோரிக்கை..

 


சிதம்பரத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் RMMCH புற நோயாளிகள் op பிரிவில் பணியாற்றும், 40க்கு மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மு.தமிமுன் அன்சாரி சட்டமன்ற உறுப்பினர் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்யும் தங்களை திடீரென பணியிலிருந்து விடுவிக்க இருப்பதாகவும், தனியார் நிறுவனத்திற்கு புதிய ஒப்பந்தம் தருவதால், அந்த நிறுவனம் தங்களை வேலையில் எடுக்க மறுப்பதாகவும் கூறினார்கள்.

திடீரென வேலையை விட்டு நிறுத்துவதால் தாங்கள் எங்கு போவது என்று தெரியவில்லை என்றும், தங்களுக்கு பணி நீட்டிப்பை உறுதி செய்ய பரிந்துரை செய்யும் மாறும் கண்ணீர் மல்க கோரினர்

உடனடியக அவர் மருத்துவமனை டீன்னிடம் இது பற்றி விசாரித்தார் பிறகு சுமித் என்ற தனியார் நிறுவனத்தின் பேசி இவர்களின் மீது கனிவு காட்டுமாறும், ஏற்கனவே பணியில் உள்ள இவர்களையே வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.இது குறித்து பரிசீலிப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.அப்படி அந்த நிறுவனம் அந்த வாய்ப்பை வழங்காவிட்டால் மேல் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.

No comments:

Post a Comment

*/