கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை பேருந்து நிறுத்தம் அருகில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின் கொள்கைத் தலைவர் அஞ்சலை அம்மாளின் 136 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு பூத்தூவி மரியாதை செய்து பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் கோடை வெப்பத்தைத் தணிக்கும் விதமாக நீர்மோர், தர்ப்பூசணி, பனை நுங்கு, வெள்ளரிப்பிஞ்சு ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் K. ஆனந்த் தலைமையில், புவனகிரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பி.டி. மகாலிங்கம், நகர செயலாளர் விஜயகுமார், சர்புதீன், ஆனந்தபாபு முன்னிலையில் நடைபெற்றது. நகர இணை செயலாளர் அமிர்தராஜ், நகர பொருளாளர் சுசேந்தர், நகர துணை செயலாளர் சுகுமாரன், சஞ்சய், நிர்வாகிகள் புவனகிரி தொகுதி பொறுப்பாளர் சர்புதீன், ஆனந்தபாபு மற்றும் தவெக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment