நெய்வேலியில் மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை.. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 June 2026

நெய்வேலியில் மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை..

 


கடலூர் மாவட்டம், நெய்வேலி வடக்குத்து அண்ணா கிராமம் அரசமர தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் மகன் ஸ்டீபன் ராஜ் 29. இவரது மனைவி பவித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். 


இவர்களுக்கு எஸ்வந்த்ராஜ்( எ) ஜெகதீஷ் என்கின்ற 7 வயது மகன் உள்ளார் இவர் வடக்குத்து பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் இருந்து மூன்றாம் வகுப்பு செல்ல உள்ளார்.


தந்தை மகன் இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவில் ஸ்டீபன் ராஜ் தனது மகனை நள்ளிரவில் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு பின்னர் கிச்சன் ரூமில் கயிறு மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 


முன்னதாக தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது சகோதரியிடம் வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி உள்ளார்.  


இந்நிலையில் இன்று அதிகாலை அவர் சகோதரி அவரது வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது யஷ்வந்த்ராஜ் என்கின்ற ஜெகதீஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


 மேலும் உள்ளே சென்று பார்த்த பொழுது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


இது குறித்து தகவல் அறிந்த நெய்வேலி நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 


இச்சம்பவம் குறித்து நெய்வேலி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பெற்ற மகனை தந்தை கழுத்தறுத்து கொலை செய்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

*/