தமிழகத்தின் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகை படத்தை மட்டுமே போட்டு நள்ளிரவில் குறிஞ்சிப்பாடி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி பாஜகவிற்கு அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
ஜீன் 4 ஆம் தேதி பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் அண்ணாமலை தனது ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு அனுப்பி விட்டதாக கூறபடும் நிலையில் அவரது ராஜினாமா ஏற்க்கபட்டதா, ஏற்க்கபட வில்லையா என்ற கேள்வி இருந்து வரும் நிலையில், அவரின் பிறந்தநாளில் புது கட்சி துவங்க போவதாகவும் கூறபடுகிறது.
இப்படிபட்ட சூழ்நிலையில் பாஜகவின் முகமாக இருக்கும் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா புகைபடங்களை தவிர்த்து விட்டு போஸ்டர்கள் அடித்து குறிஞ்சிப்பாடி நகர பகுதி முழுவதும் அவரது ஆதரவாளர்கள் நள்ளிரவில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
மேலும் அண்ணாமலையின் பிறந்தநாளில் தமிழக பாஜகவின் நிலை என்னவாக இருக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என வெளியூர்களுக்கு பயணம் செல்ல பேருந்திற்க்காக காத்திருந்தவர்களின் பேச்சாக இருக்கிறது.

No comments:
Post a Comment