கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பு நகரத்தில் நகர தவெக சார்பில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. ராஜீவ் காந்தி சிலை பேருந்து நிறுத்த பகுதியில் அமைக்கப்பட்ட விழா பந்தலில் புவனகிரி தொகுதி தவெக பிரமுகர் மகாலிங்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்க நகர செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற முதல்வர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் மரக்கன்றுகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் ஏழை எளியோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் பொது மக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள் நகர இணை செயலாளர் அமிர்தராஜ் பொருளாளர் சுசேந்தர் துணை செயலாளர் சுகுமாரன் நகர செயற்குழு உறுப்பினர்கள் முத்து மணிகண்டன், ஆரிப் முகமது, சண்முகவேல், பிரேம்குமார், பார்த்தசாரதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் மாதவராயன், மணிகண்டன், பிரகாஷ், கார்த்திக்ராஜா, ராஜசேகர், பாலாஜி, நவீன் மற்றும் பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment