புவனகிரி அருகே தனியார் பேருந்தில் குடும்பத்தினருடன் வந்த 12 வயது சிறுவன் மாயம் .. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 22 June 2026

புவனகிரி அருகே தனியார் பேருந்தில் குடும்பத்தினருடன் வந்த 12 வயது சிறுவன் மாயம் ..

 


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பில் காட்டுமன்னார்கோவில் பகுதியில் இருந்து வடலூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் ஒரு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் உணவருந்த சேத்தியாத்தோப்பு ராஜீவ் கந்தி சிலை பேருந்து நிறுத்த பகுதியில் இறங்கினர். தனியார் பேருந்தும் சென்று விட்ட நிலையில் திடீரென அந்த குடும்பத்தினர் தங்களுடன் வந்த பிரசாந்த்- அகிலா தம்பதியினரின் 12 வயது , ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் விஜய் பேருந்தில் இருந்து இறங்கவில்லை என்பதை அறிந்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கதறி அழுது துடித்தனர்.

அப்போது அருகில் இருந்த வாடகை கார் ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உடனடியாக காவல் ரோந்து வாகனத்திற்கு தகவல் அளித்தனர்‌ அதன் மூலம் ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பால் வடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து நிறுத்தப்பட்டு அதில் அமர்ந்திருந்த சிறுவன் விஜய் இறக்கி விடப்பட்டு, பின்னர் அழைத்து வரப்பட்டு சேத்தியாத்தோப்பில் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். சிறுவன் தங்களிடம் சேர்ந்ததைக் கண்ட குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்து வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர். இந்த குடும்பத்தினர் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், காட்டுமன்னார்கோவிலுக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்று விட்டு திரும்பும் போது உணவருந்த சேத்தியாத்தோப்பில் இறங்கும் போது இந்த நிகழ்வு நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது அரை மணி நேரத்திற்குள்ளாக சிறுவன் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

*/