மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு புவனகிரி எம்எல்ஏ வாழ்த்து.. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 June 2026

மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு புவனகிரி எம்எல்ஏ வாழ்த்து..

 


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வெள்ளியக்குடி கிராமத்தைச்சேர்ந்த கமலேஷ் என்ற மாணவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து, அதற்கான தேர்வினை எழுதினார். அதில் 500 க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே அதிக மதிப்பெண் பெற்ற மாணவராக வெற்றிப்பெற்றார். இதற்கு மாணவர்கள் பெற்றோர், சக மாணவர்கள், மற்றும் கிராமமக்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி பாராட்டி வந்தனர். இதுகுறித்து அறிந்த புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் கழக நிர்வாகிகளோடு அவரது வீட்டிற்கச் சென்று மாணவனுக்குபொன்னாடை அணிவித்து மென்மேலும் சாதனைப்படைத்து கிராமத்திற்கும், பெற்றோருக்கும், பெருமை சேர்க்க வேண்டும் என கூறி வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது மாணவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், அதிமுக நிர்வாகிகள் எனப் பலரும் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

*/